Manivannan Gopalsamy
10
User Rating
10Food Quality
10Food Packaging
10Veg Menu Chefhouse
- நாங்கள் வசிப்பது கணபதிபாளையம். திருப்பூர் பல்லடம் சாலையில் இருந்து இடதுபுறம் 4 கி.மீ. செல்லவேண்டும். புதிய பணி அவிநாசி சாலை இந்திரா நகரில். எனவே, அலுவலகத்திற்கு சிறிது அருகாமையில் வாடகைக்கு வீடு தேடி இன்று காலையில் கிளம்பி விட்டோம். எனவே, மதிய உணவு சமைக்க நேரமில்லை. TFG மூலமாக Chefhouse பற்றி அறிந்து காலையிலேயே சப்பாத்தி ஒரு combo நெய் சோறு ஒரு combo என்று online இல் order செய்து விட்டேன். மதியம் 12 முதல் 2 மணிக்குள் நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும். 1:30 மணி அளவில் நினைவூட்டல் call வந்தது. வீடு தேடும் படலம் தாமதமானதால், parcelஐ 2:30 மணி அளவில்தான் பெற்றுக்கொள்ள முடிந்தது. வீடு வந்து சேரும் போது நேரம் 3:00 மணி. முதலில் நெய் சோறு, காளான் gravy combo. நேரமாகி விட்டதால் அப்படியே ஆறி விட்டது. ஆனாலும் ருசி அருமை. பிறகு, சப்பாத்தி காளான் gravy. Silver foil paperஇல் சுற்றி தந்தார்கள். சூடு அப்படியே இருந்தது. ஆனால் ருசி வித்தியாசமாக இருந்தது. இறுதியில் கஸ்டர்டு ஃபிர்னி பாயாசம். ஆகா! சுவையோ சுவை! மாலை அந்த சகோதரியை தொடர்பு கொண்டு சப்பாத்தி யின் வித்தியாசமான சுவை பற்றி கேட்டோம். கொண்டை கடலை சேர்த்ததாக தெரிவித்தார். சகோதரி, இதே பக்குவத்தை தொடருங்கள். தங்கள் தொழில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்!