81 / 100

Manohar Shanmugam

Biryani-food-review
10

User Rating

10

Food Quality

10

Food Packaging

10

Biryani Food Review

  • பிரியாணியே கையில் எடுத்து வாயருகே கொண்டு செல்லும் போதே மூக்கு பொறுப்புணர்வோடு வேலை செய்து கண்டுபிடித்துவிடும்.. முதல் நுகர்விலேயே இறைச்சி, நெய், மசாலா இந்த மூன்றும் கலந்த வாசனையே சரிவிகிதத்தில் நீங்கள் உணர்ந்தால் பேரதிர்ஷ்டக்காரர். கொரானா பக்கத்தில் நீங்கள் போனால் கூட அது யூ டர்ன் போட்டு விலகி ஓடிவிடும். மூன்றில் இரண்டை உணர்ந்தால் கூட அன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்ட தினம்தான். ஒன்றை மட்டும் உணர்ந்தாலும் முதலுக்கு மோசமில்லை... ஆறுதல் பரிசு சோப்பு டப்பா என நடையே கட்டிவிடலாம். ஆனால் இந்த மூன்றுக்கு பதிலாக தக்காளி வாசனை வந்தால்... Sorry... அந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் முன் ஜென்ம வினை அது என விட்டு விட வேண்டியதுதான். சரி, நான் இன்று Chefhouse ல் சாப்பிட்ட மட்டன் பிரியாணி இதில் எந்த வகை? உடனே சொல்லி விட வேண்டுமா? என்ன அவசரம்....? லாக் டவுனில் எனக்கும் வேலையில்லை.. உங்களுக்கும் வேலையில்லை.... கொஞ்ச நேரம் ஜல்லியடிப்போம். TFG யில் கொஞ்ச நாட்களாக நல்ல reviews. தினுசு தினுசான காம்போக்கள்.... Takeaway பாயிண்ட்கள் போன்ற புதிய முயற்சிகள்... நீட்டான பேக்கேஜிங் போன்ற பாசிட்டிவ் விஷயங்கள் Chefhouse மீதான என் கடைக்கண் பார்வையே திருப்ப வைத்திருந்தது. தாயக்கட்டையே உருட்டிக்கொண்டிருந்த வீட்டம்மணியிடம் பிரியாணி ஆர்டர் செய்யலாமா என்றேன்? முறைத்த முறைப்பில் போன வாரம் ஒரு கடையில் zomotta வில் ஆர்டர் செய்திருந்த பிரியாணியில் திருவிழாவில் தொலைத்த குழந்தைகளை தேடுவதுபோல அரிசிக்குள் மட்டன் பீஸ்களை தேடி தேடி ஒன்றை கூட கண்டிபிடிக்க முடியாமல் டயர்டான வரலாற்று சோகம் நிகழ்ந்திருந்தது நினைவுக்கு வந்து போனது. இருந்தும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் வேதாளத்தை சமாதானப்படுத்தி ஐயோ Sorry Sorry... என் வீட்டம்மணியே சமாதானப்படுத்தி Chefhouse ல் ஒரு மட்டன் பிரியாணி, ஒரு சிக்கன் பிரியாணி காம்போ, ஒரு சப்பாத்தி ஹரியாலி காம்போ ஆர்டரித்தேன். உணவு மதியம் ஒன்றில் இருந்து இரண்டுக்குள் வந்துவிடும் என்றார்கள். டெலிவரியில் அவர்களின் கடந்த கால statistics IPL ல் கலக்கிய கேதார் ஜாதவ் போல கொஞ்சம் பீதியே கிளப்பியது. ஆனாலும் 1.30க்கு டெலிவரி செய்து விட்டார்கள். முதலில் சப்பாத்தி .... குட்டி பேப்பர் ரோஸ்ட்டை காக்கி கலரில் கண்டது போல அவ்வளவு மெல்லிசாக இந்த பக்கத்தில் இருப்பவர் அந்த பக்கத்தில் இருப்பவரை எளிதாக பார்க்கும்படி வடிவமைத்திருந்தார்கள். இருந்தாலும் அதற்க்கு கொடுத்திருந்த விலைக்கு நிச்சயம் ஓகேதான். ஹரியாலி சிக்கனும் அதற்க்கு ஆப்டாக இருந்தது. சிக்கன் பிரியாணி காம்போ - நன்றாக வெந்திருந்த சிக்கன் பீஸ்கள் பிரியாணியின் ருசியை சற்று ஏற்றிக்காட்டியது. க்ரீன் சிக்கன் சிக்கனமாக இருந்தது. ஹில்டன் சிக்கன் - காரத்தன்மை அதிகமான உணவுகள் கொரானா கிருமியை அழிக்கும் என எதாவது புஸ்தகத்தில் படித்திருப்பார்கள் போல செமத்தியாக காரம் சேர்த்திருந்தார்கள். அவர்களின் signature டிஷ் பிரிணி... சுவை ஓகே, ஆனால் இன்னமும் கொஞ்சம் கெட்டியாக இருந்திருக்கலாம் என்பது வீட்டம்மினியின் அபிப்ராயம். கடைசியாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மட்டன் பிரியாணி..... சீரக சம்பா அரிசியே கைகளில் ஏந்தி வாய்க்குள் கொண்டு செல்வதற்கு முன்பே உணர்ந்தது நல்ல நெய் வாசனையும் அதை தொடர்ந்து வந்த மெல்லிசான மசாலா வாசனையும்தான். மட்டன் பீஸ்களும் நன்கு வெந்து தேவையான அளவிற்கு இருந்ததில் மகிழ்ச்சியே. மொத்தத்தில் CPR டெஸ்ட் எடுத்து நெகடிவ் என வரும்போது கிடைக்கும் திருப்தியே இந்த மட்டன் பிரியாணியும் கொடுத்தது. கண்டிப்பாக முயற்சிக்கலாம். Jokes apart.... இந்த கொரானா சூழ்நிலையில் உணவில்லாமல் சிரமப்படுபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளது... தங்களை தொடர்பு கொள்ளலாம் என நேசக்கரம் நீட்டியிருக்கும் Chefgouse க்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும். அதே போல நம் TFG உறுப்பினர்களுக்கு.... எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் உங்கள் பாசிடிவிட்டியே.... மன உறுதியே விட்டு தந்து விடாதீர்கள்.... கொரானாவுக்கான முதல் மருந்து நான் உன்னை ஜெயிப்பேன் என்கின்ற நம் தன்னம்பிக்கைதான்.